டில்லி

த்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ஏராளமான இந்திய மாணவர்கள் அங்குச் சிக்கி உள்ளனர்.  மேலும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏராளமான இளைஞர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.   இந்திய நாணயமான ரூபாய் மதிப்பு தற்போது கடுமையாகச் சரிந்துள்ளது.

இது குறித்துப் பல காங்கிரஸ் தலைவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  இவற்றுக்கு முக்கிய காரணம் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளே என அவர்கள் கூறி வருகின்றனர்.  அவ்வகையில் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது பதிவில், “எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.  தற்போது ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.   வேலையில்லா திண்டாட்டம் மற்ரும் பண வீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.   நமது பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது.

தவிர ஏராளமான இந்திய மாணவர்கள் உக்ரைன் போரினால் அங்குச் சிக்கி உள்ளனர்   இவற்றை கையாள மத்திய பாஜக அரசு எந்த திட்டமும் தீட்டவில்லை.  மாறாக மோடியின் மத்திய பாஜக அரசு தன்னை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.