சென்னை:
இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 23 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 120 நாட்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி காணப்பட்டது. உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க படாமல் இருந்து வந்தது. நாளை 5 மாநில தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே நாளை மறுநாள் முதல் பெட்ரோல், டீசல் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தை நிலவரத்திற்கேற்ப மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.