சென்னை

க்ரைன் போரில் சிக்கி உள்ள இந்தியர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று,  “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். பலர் ரயில் நிலையங்களில் இரண்டு, மூன்று நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உக்ரைனில் சிக்கி தவித்து வருகிற ஆயிரக்கணக்கான மாணவர்களைக் காப்பாற்றி இந்திய நாட்டிற்கு அழைத்து வருகிற முயற்சிகள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க முடிந்ததற்கு இந்தியாவின் ஆற்றலே காரணம் என்று பெருமிதப்பட்டுக் கொள்வதன் மூலம் தேர்தல் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்.

பரந்த மனப்பான்மையோடு செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, தேர்தல் அரசியலுக்காக இதை பயன்படுத்திக் கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, உக்ரைனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களைப் பாதுகாப்பதற்கு மோடி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.