செங்கல்பட்டு

திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரைக் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி அவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இது குறித்து தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சை எழுந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது   காவல்துறையினர் ஜெயக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் செங்கல்பட்டு அருகே ஜெயக்குமார் ரூ. 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த இரு வழக்கிலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று ஜெயக்குமாருக்கு திமுக தொண்டரை அரை நிர்வாணமாக்கிய வழக்கில் ஜாமீன் கிடைத்தது. அவர் மீது பதியப்பட்ட நில அபரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தக்கல் செய்யப்பட்டிருந்தது.  இன்று அந்த ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  எனவே ஜெயக்குமார் சிறையிலேயே இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.