சென்னை
தமிழகத்தில் இன்று 348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 53,474 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,43,51,808 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 3 பேர் வெளிநாட்டில் இருந்தும் இருவர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். இதுவரை 34,49,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று இருவர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 38,006 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,025 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,06,649 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 5,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,50,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார். இதுவரை 9,063 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 227 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,39,739 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 51 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 39 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,564 பேர் பாதிக்கப்பட்டு 2,614 பேர் உயிர் இழந்து 3,26,271 பேர் குணம் அடைந்து தற்போது 679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,073 பேர் பாதிக்கப்பட்டு 2,656 பேர் உயிர் இழந்து 2,31,905 பேர் குணம் அடைந்து தற்போது 512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.