சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வரும் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாட்டி காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வரும் 28ந்தேதி (திங்கட்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார். அன்றைய தினம், புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் வரும் ராகுல், அங்கு  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுடன், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மக்களின் நன்மதிப்பை பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்க உள்ளதுடன், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆலோசனை கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.