உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது என்பது கூட தெரியாத ஒருவர் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும் இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடடா அடடா அறிவு கொழுந்து !! @BJP4TamilNadu pic.twitter.com/6Fle96bU1z
— 𝗥𝗮𝗺𝗮 𝗦𝘂𝗴𝗮𝗻𝘁𝗵𝗮𝗻 (வாழப்பாடி இராம சுகந்தன்) (@vazhapadi) February 21, 2022
இதற்கு, பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த மாநில தேர்தல் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று என்றும் இதில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் கூறி அண்ணாமலை புகாருக்கு கைவிரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.