டெல்லி: இந்தியாவில் இதுவரை 5 வயது முதல் 18 வயது உடைய 2 கோடி குழந்தைகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 25 ஆயிரத்து 920 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 2.07% ஆக உள்ளதாகவும், வாராந்திர தொற்று விகிதம் 2.76% ஆக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது வரை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.12% ஆக இருப்பதாகவும், இதுவரை 5,10,905 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2,92,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 1,74,64,99,461 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 5 வயது முதல் 18 வயது உடைய 2 கோடி சிறுவர்களுக்கு இதுவரை 2 டோஸ் தடுப்புசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.