சென்னை

மிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,34,77,508 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,325பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,946 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,894 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,69,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 31,368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,47,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,048 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 891 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,33,299 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 5,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 231 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 113 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,27,931 பேர் பாதிக்கப்பட்டு 2,608 பேர் உயிர் இழந்து 3,20,613 பேர் குணம் அடைந்து தற்போது 4,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,33,979 பேர் பாதிக்கப்பட்டு 2,652 பேர் உயிர் இழந்து 2,28,735 பேர் குணம் அடைந்து தற்போது 2,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.