டில்லி

மிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.  அதில் அவர், “ஆங்கிலத்தில் சிஎன்ஜி என்று அழைக்கப்படும் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை  எரிவாயுவுக்கான நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட  மாநகர எரிவாயு விநியோக அமைப்புகள் நிறுவி வருகின்றன.

அரசுக்கு பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு மையம் வழங்கியுள்ள தகவலின் படி, 2019-20-ம் நிதியாண்டில் 4632 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும், 2020-21-ம் நிதியாண்டில் 3678 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும், 2021-22-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2462 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 3,628 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன; இதில் தமிழகத்தில் 68 உள்ளன.விரைவில்  நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 890 நிலையங்களை நிறுவத்  திட்டமிடப்பட்டுள்ளது.” என அறிவித்துள்ளார்.