வேலூர்: வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 24 வார்டு பாமக பாமக வேட்பாளர் திமுவுக்கு தாவிய விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரை கடத்தவுமில்லை; மிரட்டவுமில்லை என திமுக எம்எல்ஏ நந்தகுமார் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகிறது. முன்னதாக, வேலூர் மாநகராட்சி 24 மாவட்டத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பரசுராமன் என்பவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்ட பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், வேட்பாளரையே கடத்துறாங்க. .இதுதான் திமுக ஜனநாயகமா? என கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டி ருந்தார். அதில், “வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!” மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என அந்த பதிவில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் திமுக மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ. பதில் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
மரியாதைக்குரிய பாமக நிறுவனர் அய்யா மருத்துவர் திரு.டாக்டர் ராமதாஸ் அவர்களே, வேலூர் மாநகராட்சி 24 வார்டு பாமக வேட்பாளர் திரு பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை,மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து திமுகவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார்,அது திமுக நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம், இதற்கான ஆதாரமும் இருக்கிறது,
அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை இந்த உண்மையை நன்கு விசாரிக்கமால் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல காரணம்,பாமக வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.