பரிமலை

ரும் 12 ஆம் தேதி அன்று மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதப் பிறப்பின்போது சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கமாகும்.  தவிர மண்டல பூஜைகள், மற்றும் மகரவிளக்கு காலங்களிலும் சபரிமலை நடை திறக்கப்படும்,.  இந்த வருடம் மண்டல பூஜைகள் மற்றும் மகர விளக்கு முடிந்து சென்ற மாதம் 20 ஆம் தேதி சபரிமலைக் கோவில் நடை சார்த்தப்பட்டது.

மாசி மாத பூஜைகள் வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ந்டை பெற உள்ளது.   வரும் 12 ஆம் தேதி மாலை சபரிமலைக் கோவில் நடை திறக்கப்படுகிறது.  அன்று வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறாது.   அதற்கு அடுத்த நாள் அதாவது 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளன.

சபரிமலைக் கோவில் நடை வரும் 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சார்த்தப்படுகிறது.  இந்த பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தேவசம் போர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விரைவில்  இது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.