சென்னை:
நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் விலக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.