ராய்ப்பூர்: இரண்டு மகன், இரண்டு மகள் மற்றும் தம்பதிகள் 2 பேர் என கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மொத்தமாக துறவிகளாக மாறிய நிகழ்வு ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சத்திஸ்கர் மாநிலத்தில் நடைற்றுள்ளது.
இந்த குடும்பத்தினருக்கு கோடி கணக்கான ரூபாய் மதிப்பலான பல சொத்துக்கள் உள்ளதாகவும், அவற்றை உதறிவிட்டு இந்த கோடீஸ்வர குடும்பமே துறவிகளாக மாறியுள்ளது/ மத்திய சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்தது இந்த கோடீஸ்வர குடும்பம். இவர்கள் துறவிகளின் துறவு வாழ்க்கைக்காக 300 மில்லியன் ரூபாய் ($4 மில்லியன்) மதிப்புள்ள பங்களா, கார்கள் மற்றும் வணிகத்தை மாற்றிக்கொண்டது.
சத்திஸ்கர் மாநிலத்தின் மருந்து வணிகத்தில் பிரலமானவர் புபேந்திரா டக்லியா. இவருக்கு சப்னா என்ற மனைவி மற்றும் தேவேந்திரா, ஹர்ஷித் என்று இரு மகன்கள், மஹிமா, முக்தா ஆகிய 2 மகள்கள் உள்பட 6 பேரும் தங்களது ஆடம்பர வாழ்க்கையை உதறிவிட்டு, துறவிகளாக மாறி உள்ளனர். அதன்படி ஐந்து நாட்கள் சடங்கு விழாவிற்குப் பிறகு ஜெயின் துறவிகளாகத் மாறியுள்ளனர். நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமண துறவிகளாக, அவர்கள் உலக ஆதாயங்களையும் இன்பங்களையும் துறந்து, யாசகம் மற்றும் மத நன்கொடைகளில் உயிர்வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது அவர்கள் இனிமேல், தங்கள் அதிர்ஷ்டத்தை புறக்கணித்து, அவர்கள் பிச்சை அல்லது மத நன்கொடைகளில் உயிர்வாழ முடிவு செய்துள்ளனர். புபேந்திரா மற்றும் குடும்பத்தாரின் இந்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக அவர்கள் கடந்த ஆண்டு (2021) நவம்பரில் வாழ்க்கையை மாற்றும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதற்கான நிகழ்ச்சி ஜனவரி 27 அன்று தொடங்கப்பட்டது. அன்றைய தினம் டக்லியாஸ் குடும்பத்தனர் துறவியாக மாறுவதற்கு துவக்கத்திற்கு முன் வண்ணமயமான ஆடைகளில் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த விழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, ஐந்து நாட்கள் நீடித்த விழாவிற்கு முன்பு குடும்பம் ஒன்றாக கடைசி உணவை சாப்பிட்டது, அங்கு அவர்கள் ஒரு சிக்கனமான வாழ்க்கையை வாழ்வதாக உறுதியளித்தனர். இந்த சடங்கின் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் தங்கள் தலைமுடியை தாங்களே பிடுங்கினர்.
பேந்திரா டக்லியா குடும்பத்தில், அவரது இளைய மகன் முதலில் துறவியாக வேண்டும் என்ற ஆர்வம் காட்டினான். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் துறவறம் பூண முடிவு செய்துள்ளதனர், இது ஒரு பெரிய முடிவு, துறவறத்தைத் தழுவுவதற்கு ஒரு பெரிய இதயம் தேவை. அவர்கள் அந்த முடிவை எடுத்துள்ளர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
உலகின் பழமையான மதங்களில் சமண மதமும் ஒன்றாகும், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் மறறும் பின்பற்றுபவர்கள் அகிம்சை மற்றும் உடைமை இல்லாத ஐந்து கொள்கைகளை கடைபிடிக்கின்றனர்.
அதன்படி துறவிகளான கோடீஸ்வரர் குடும்பம் இனிமேல் சமண நம்பிக்கைபடி வெறுங்காலுடன் நடக்க வேண்டும், கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் செல்ல வேண்டும், வெள்ளை ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் உணவு சாப்பிட கையால் செய்யப்பட்ட மரக் கிண்ணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் குளிக்கக் கூடாது, நிரந்தரமாக வீடு கட்டிக் கொள்ளக் கூடாது, சமணக் கோட்பாடுகளின்படி இணையம் அல்லது மொபைல் போன் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது.
இதுமட்டுமின்றி, வேர் காய்கறிகள் (கிழக்கு வகைகள்( மற்றும் குறிப்பிட்ட பழங்களை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் குறிப்பிட்ட மாதங்களில் கீரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இதுபோன்ற ஒரு கடுமையான வாழ்க்கை கோடீஸ்வரர் குடும்பத்தினர் எடுத்துள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஜைன மதத்தை சேர்ந்தவர்கள் ஐந்து மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் மதநம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள்.
ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில், 13 வயது ஜெயின் பெண் சடங்கின் ஒரு பகுதியாக 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை மாய்த்து கொண்டது சர்ச்சை யானது. அதுபோல கடந்த ஆண்டு, ஒரு துறவி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஒரு தவம் இருந்தார். இதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.