சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பேச்சு வார்த்தையிடம் ஈடுபட விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் இருந்து சேலம் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளிடையே தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக அதிமுக இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தொகுதிகளை பங்கிடுவதில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், அதிமுக தலைமை திடீரென வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை புறக்கணிக்கும் வகையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றுகொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இன்று அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பும் இல்லை.
வேட்பாளர்கள் பட்டியலை திடீரென வெளியிட்ட அதிமுக தலைமையின் அறிவிப்பால் அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதிமுக தலைவர்கள், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி குறித்து பேச விரும்பாத நிலையில், எடப்பாடிபழனிச்சாமி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது இரு கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், அதன்படி,கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு,விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள், விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகள், திண்டிவனம் நகராட்சி 33 வார்டுகள், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகள், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.இ