உலகின் மிக இளம் வயது கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நைஜீரியாவை சேர்ந்த 9 வயதே ஆன மொம்ஃபா ஜூனியர்.
இன்ஸ்டாகிராமில் 9 பதிவுகளை போட்டு 25000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் மொம்ஃபா ஜூனியர்.

6 வயதில் தனது தந்தையிடம் இருந்து ஒரு மாளிகையைப் பரிசாக பெற்ற மொம்ஃபா ஜூனியர் தற்போது அரண்மனை போன்ற பல மாளிகைகளுக்கு மட்டுமன்றி சொந்தமாக ஒரு ஜெட் விமானமும் வைத்துள்ளார்.
நைஜீரியாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் பிரபலமானவராக வலம் வரும் மொம்ஃபா என்று அழைக்கப்படும் இஸ்மாலியா முஸ்தபாவின் மகன் தான் இந்த மொம்ஃபா ஜூனியர்.
முகமது அவல் முஸ்தபா எனும் இந்த சிறுவன் அவரது தந்தையைப் போன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் என்பதால் இவரை மொம்ஃபா ஜூனியர் என்று அழைக்கிறார்கள்.
https://www.instagram.com/p/B-yxbwnAMC9/
ஏற்கனவே இவர் தனது தனி ஜெட் விமானத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைராலானது.
இவரது தந்தை இஸ்மாலியா முஸ்தபா மீது 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும், அந்நாட்டு ஊழல் ஒழிப்பு துறை முஸ்தபா மோசடியாக சேர்த்த பணத்தை அசையும் சொத்துகளாகவும் சொத்துகளிலும் பதுக்கியுள்ளார் என்று கூறிவருகிறது.