டில்லி
மத்திய அரசு தளவுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகளை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு கடுமையாகி வருகிறது. கடந்த 2,3 தினங்களாகக் குறையத் தொடங்கிய கொரோனா மீண்டும் அதிகரித்து இன்றைய காலை அறிவிப்பின்படி தினசரி பாதிப்பு 2.86 லட்சமாகி உள்ளது. இதையொட்டி மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர்,
“தற்போது நாடெங்கும் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆயினும் கொரோனா, ஒமிக்ரான் பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 407 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கவலை தரக்கூடிய வகையிலேயே உள்ளது. அங்கெல்லாம் கொரோனா பாசிட்டிவ் அளவு 10 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது
எனவே இதையொட்டி தளர்வுகளுடன் கூடிய கொரொனா கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. நாடெங்கும் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைஅக்ளில் எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது”
என்று தெரிவித்துள்ளார் .