டெல்லி: மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக டிவிட்டர் நிறுவனம்,  தன்னை பின் தொடர்பவர்களை  கட்டுப்படுத்தி வருகிறது, மத்தியஅரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி டிவிட்டர் சிஇஓ-க்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு டிவிட்டர் நிறுவனம் பதில் தெரிவித்து உள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டிவிட்டர் நிறுவனத்துக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். டிசம்பர் 27 தேதியிட்ட டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு  எழுதியுள்ள  கடிதத்தில், “இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான பேச்சைத் தடுப்பதில் டிவிட்டர் மத்திய அரசுக்கு  உடந்தையாக இருப்பதாக நான் நம்புகிறேன்.” டிவிட்டர் சமுக வலைதளத்தில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சத்துக்கு அதிகமான  இருந்தது. டெல்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து தான் இந்த பிரச்சனை தொடங்கியது. வேளாண் சட்டம் குறித்து நான் பதிவிட்ட வீடியோ ஒன்று அதிக பார்வைகளை பெற்றிருந்தபோதும் நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  ராகுல் காந்தியின் கணக்கு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 14 வரை கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டது. தனது கணக்கு முடக்கப்பட்டதற்கு பிறகு, அதாவது,  2021 ஆகஸ்ட் முதல் தன்னை  பின்தொடர்பவர்கள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டு உள்ளனர்.  அவர் மாதத்திற்கு 2.3 லட்சத்திற்கும் அதிகமான புதிய பின்தொடர்பவர்கள் இருந்த நிலையில், பின்னர் அது  6.5 லட்சமாக உயர்ந்தது. ஆனால், தற்போது, வெகுவாக குறைந்துள்ளது.  இதை தற்செயல் என விட்டு விட முடியாது.

மைக்ரோ பிளாக்கிங் தளம் மத்திய அரசின் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாகவும், தனது  டிவிட்டர் பின்தொடர்பவர்களின் வளர்ச்சி ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்ததுடன், . இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இதற்கு டிவிட்டர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்துள்ள டிவிட்டரின் செய்தித் தொடர்பாளர், டிவிட்டரில்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை காணக்கூடிய அம்சமாகும், தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. மேலும் எண்கள் அர்த்தமுள்ளவை மற்றும் துல்லியமானவை என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். டிவிட்டர் மேடையில் கையாளுதல் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையைக் கொண்டுள்ளது.”

“ஸ்பேம் மற்றும் தீங்கிழைக்கும் ஆட்டோமேஷனை நாங்கள் இயந்திர கற்றல் கருவிகள் மூலம் மூலோபாய ரீதியாகவும் அளவிலும் எதிர்த்துப் போராடுகிறோம், மேலும் ஆரோக்கியமான சேவை மற்றும் நம்பகமான கணக்குகளை உறுதி செய்வதற்கான நிலையான மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

“பிளாட்ஃபார்ம் கையாளுதல் மற்றும் ஸ்பேம் தொடர்பான எங்கள் கொள்கைகளை மீறுவதால் ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான கணக்குகளை நாங்கள் அகற்றுகிறோம். மேலும் சூழலுக்கு சமீபத்திய Twitter வெளிப்படைத்தன்மை மையத்தின் புதுப்பிப்பைப் பார்க்கவும். சில கணக்குகள் சிறிய வித்தியாசத்தைக் கவனிக்கும்போது, ​​சில சந்தர்ப்பங்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.”

டிவிட்டர் தளம் ஒருபோதும்  தன்னிச்சையாக செயல்படாது. பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரணம் தான்.

இவ்வாறு கூறியுள்ளார்.

டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்பு!