டெல்லி : மத்தியஅரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ள நிலையில்,மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவரும் முன்னாள்முதல்வருமான புத்ததேப் பட்டாச்சார்யா, பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாடகி சந்தியா முகர்ஜியும் பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.
மத்தியஅரசு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, 2022ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், தமிழ்நாட்டைச் சேர்த்ந 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கொரோனா தடுப்புசி தயாரிப்பு நிறுவன அதிகாரியான அதார் பூனம்வல்லா உள்பட மொத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி, பத்ம பூஷன் விருதை வாங்கப்போவதில்லை என தெரிவித்து உள்ளார். 90வயதுக்கு மேற்பட்ட நிலையில், பத்மஸ்ரீ விருது பெறுவது அவமானது என்றும், இளம் தலைமுறையினருக்கு வழங்குங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவரது மகள் சௌமி சென்குப்தா, மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து விருதுகுறித்து தெரிவித்ததாகவும், அதை ஏற்க சந்தியா மறுத்துவிட்டதாகவும், ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ வழங்குவது மிகவும் அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புத்ததேப் பட்டாச்சார்யாவும் பத்மபூஷன் விருதை பெறப்போவதில்லை என கூறியிருந்த நிலையில், பாடகி சந்தியாவும் பத்மா விருது தேவையில்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.