பாட்னா: பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரமாண கடந்த 2019ம் ஆண்டு நடைபெற இருந்த CBT-1 ரயில்வே தேர்வுகள், பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த 2020 ஏப்ரல்-ஜூலை-க்கு இடையில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகள் என 133 ஷிப்டுகளில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜனவரி 14, 2022 அன்று அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையில், ரயில்வேயின் அடுத்த கட்ட CBT-2 தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏற்கனவே நடைபெற்ற ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் , இதனால் CBT 2 தேர்வை ரத்து செய்து தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கயாவில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த போராட்டக்காரர்கள் Ara-Sasaram passenger ரயிலின் எஞ்சினுக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினல், தீயை அணைத்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், ரயிலுக்கு தீ வைத்த சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என கயா எஸ்எஸ்பி ஆதித்ய குமார் தெரிவித்துள்ளார்.