டில்லி: வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான ‘சவுரிய சக்ரா’ விருதுகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு, குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ‘சவுரிய சக்ரா’ விருது 6 ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.அதன்படி இ சவுரிய சக்ரா விருது ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீரமரணமடைந்த ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளை துணிச்சலுடன் சுட்டு வீழ்த்தி, வீர மரணமடைந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார் அனில் குமார் தோமர், ஹவில்தார் பின்கு குமார், ஹவில்தார் கஷிரே பம்மநல்லி, செபாய் மருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோருக்கு சவுரிய சக்ரா விருது மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மாவுக்கும் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 12 பேருக்கு சௌர்ய சக்கரங்கள், 29 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள், 04 உத்தம யுத்த சேவா பதக்கங்கள், 53 அதி விசிஷ்ட் சேவா பதக்கங்கள் (AVSM), 13 யுத் சேவா பதக்கங்கள், 03 பார் முதல் விஷிஷ்ட் சேவா பதக்கங்கள், 1032 பதக்கங்கள் வரை, வீரம்), 81 சேனா பதக்கங்கள் (வீரம்), 02 வாயு சேனா பதக்கங்கள் (கலான்ரி), 40 சேனா பதக்கங்கள் (கடமை பக்தி), 08 நாவோ சேனா பதக்கங்கள் (கடமை பக்தி), மற்றும் 14 வாயு சேனா பதக்கங்கள் (கடமை பக்தி). 12 சௌர்ய சக்கரங்களில் 6 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.