காஞ்சிபுரம் : கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடி நகைக்கடன் வழங்கிய விவகாரததில் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக் கணக்கில் நகைக்கடன் பெற்றது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது, வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி கடன் பெற்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திமுக அரசு ஆய்வு நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு நகைக் கடன் வழங்கிய பெண் ஊழியர் பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம், 2 பேர் கைது 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடிக்கு நகைக்கடன் வழங்கியுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.