சென்னை
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையை விட குறைவாக உள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தது. இதையொட்டி நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால் பலன் கிடை த்துள்ளது. தற்போது அகில இந்திய் அளவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “தற்போதைய நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் பெறத் தகுதி பெற்றும் போடாதோருக்கும் தொற்று பரவௌம் அபாயம் உள்ளது. இது குறித்துப் பல மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடாதோர் ஆவார்கள்.
கொரோனா இரண்டாம் அலையின் போது இறப்பு விகிதம் 1:100 ஆக இருந்தது. அது மூன்றாம் அலையில் 1:1000 ஆக குறைந்துள்ளது. அதாவது தற்போது 30000 பேர் பாதிக்கப்பட்டால் அவர்களில் 30 பேர் உயிர் இழக்கின்றனர். எனவே இந்த முறை பாதிப்பு கடுமையாக இல்லை என்பது உண்மையாகிறது. இதற்கு இறப்பு விகிதம் ஒரு உதாரணம் ஆகும்.
தற்போதைய அலையில் தடுப்பூசி போடாதோரில் 68% பேர் மட்டும், ஒரே டோஸ் போட்டார்களில் 12% பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இரண்டாம் டோஸ் போட்டு 9 மாதங்கள் முடிந்தவர்கள் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” எனக் கூறி உள்ளார்.