புதுடெல்லி: 
ந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டது என்று கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில்,  இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறி விட்டது.  பெரு நகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக ஒமிக்ரான் உருவெடுத்துள்ளது. அறிகுறி இல்லாத போதிலும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.