ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன.

அகமதாபாத் அணியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாயும், ரஷித் கானுக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

3வது வீரரான சுப்மான் கில்லுக்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லக்னோ அணியில் விளையாட கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் பிஸ்னாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

கே.எல். ராகுலுக்கு முதலில் 15 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2018 ம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாட தேர்வான போதே தனக்கு 11 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் நான்காண்டுகள் கடந்த நிலையில் தற்போது அதே அணியில் விளாயாடினால் கூட தனக்கு 16 கோடி ரூபாய் கிடைத்திருக்கும் என்றும் கே.எல். ராகுல் கூறியதாக தெரிகிறது.

இதனால் 15 கோடி ரூபாய் சம்பளத்தை ஏற்க மறுத்து இழுபறி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது, இதனை அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் சம்பளத்தில் இருந்து 2 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு கே.எல். ராகுலுக்கு அதிகப்படுத்தி தர லக்னோ அணி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கே.எல். ராகுலின் சம்பளம் 17 கோடி ரூபாயாகவும், ஸ்டோனிஸ்க்கு 9.2 கோடி ரூபாய் மற்றும் பிஸ்னாய்க்கு 4 கோடி ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் அதிக சம்பளம் கொடுத்து தக்க வைக்கப்பட்ட வீரர் என்ற கோலியின் சாதனையை கே.எல். ராகுல் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.