டில்லி
இனி ஒரே தொலைப்பேசி எண் மூலம் கோவின் செயலியில் 6 பேர் வரை பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் பாதிக்கபப்ட்டோர் எண்ணிக்கை 3.47 லட்சத்துக்கு மேல் அதிகரித்து மொத்தம் 3.85 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி சுமார் 20.18 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இது வ்ரை 160.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது முதியோருக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி, மற்றும் 15- 18 வயது சிறாருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது
கொரோனா தடுப்பூசிக்கு பதிதல், சான்றிதழ் அளித்தல் ஆகியவை கோவின் என்னும் மொபைல் செயலி மூலம் நடந்து வருகிறது. இந்த செயலியின்படி இதுவரை ஒரே தொலைப்பேசி எண்ணில் 4 பேர் பதியலாம் என உள்ளது. அதை மத்திய அர்சு 6 பேராக உயர்த்தி உள்ளது. இனி ஒரே தொலைப்பேசி எண்ணில் 6 பேர் வரை பதிய முடியும்.