டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இறப்பு எண்ணிக்கை 491 ஆக பதிவாகி யுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,287 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 14,000 அதிகம்/ இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,82,18,773 ஆக உள்ளது.
இந்தியாவில் நேற்று 491 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 4,87,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,23,990 தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,58,07,029 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 19,24,051 ஆக உள்ளது. தினசரி நேர்மறை விகிதம்: 16.41%
நாடு முழுவதும் இதுவரை 1,59,67,55,879 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 73,38,592 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 70,93,56,830* சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,35,180 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பு:
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 8,961 ஆக இருந்த நிலையில்,தற்போது 9,287 ஆக உயர்ந்துள்ளது. நேற்றை விட 3.63% அதிகரித்துள்ளது