சென்னை: மாநில திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகத்தில் உள்ள அரங்கில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர்ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா, டாபே மல்லிகா சீனிவாசன், சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதில் பட்ஜெட் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel