சென்னை:
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு நாளை முதல் மருத்துவ தொகுப்பு வழங்கபடும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவிக்கையில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கோள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே தொற்றை கட்டுப்படுத்தும் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டாமல் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் உள்ளிட்டவைகள் அடங்கிய மருத்துவத் தொகுப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.