திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகப் பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் இன்று விடிகாலை சென்னை திருவல்லிக்கேணி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ரசித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel