திருப்பூர்: தமிழ்நாட்ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் என்று உறுதி அளித்த மத்தியஅமைச்சர் எல்.முருகன் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று திறக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஒரே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அர்ப்பணிக்கபடுகின்றது. இந்த கல்லூரிகள் 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,450 கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் 11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது. தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும். அந்த மருத்துவமனையில் தமிழக மக்கள் சிகிச்சை பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதுபோல இன்று செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருக்குறளை பிரதமர் முன்னிலைபடுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தில் திருக்குறள் 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று விவேகானந்தர் பிறந்த தினம். இதை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குபதில் அளித்த அமைச்சர், தமிழ்நாட்டில், ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது. டெக்னாலஜி அப்கிரேடசன் மட்டுமே நடக்கின்றது என்றவர், முதலமைச்சரின் தமிழ்புத்தாண்டு குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஓன்றுதான் என்று பதிலளித்தார்.