டில்லி

ரு மாமியார் மருமகளுக்குக் கொடுமை செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஒருவருக்கும் தேவி என்னும் பெண்ணுக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.  தேவியின் கணவர் சவுதி அரேபியாவில் பணி புரிந்ததால்  ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்த தேவி மாமியாருடன் இருந்துள்ளார்.   தேவியை மாமியார் மிகவும் கொடுமை செய்துள்ளார்.

தேவி தனது கணவரைத் தமிழகத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  ஆனால் மாமியார்  தனது மகன் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பணி புரிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  தொடர்ந்து மாமியார் கொடுமை செய்ததால் மன உளைச்சல் அடைந்த தேவி கடந்த 2006 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு பல நீதிமன்றங்களைத் தாண்டி தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்று அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் ”ஒரு பெண் மற்றொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்த பெண் பாதிக்கப்படுகிறாள்.  ஒரு மாமியார் தனது மருமகளைக் கொடுமை செய்தால் அது கடுமையான தண்டனைக்குரிய குற்றம்” எனத் தெரிவித்து மாமியாருக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.