டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி பணித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும், புதிதாக 19,166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 15,68,896 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா நோயால் எண்ணிக்கை 14,77,913 ஆக உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போதைக்கு அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் அலுவலகங்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி டெல்லியில் உள்ள தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்து மட்டுமே பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளாபல், அனைத்து உணவகங்களும், பார்களும் மூடப்பட்டுள்ளன. புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் நாட்களில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.