சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி  நேற்று (ஜனவரி 10) முதல்  நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  முதியோர் மற்றும் முன்களப் பணியாளர் என்ற முறையில், இன்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். சென்னை மந்தை வெளிப்பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தற்போது சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.