கொழும்பு

ந்தியாவின் உதவியுடன் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையே சொகுசு ரயில் சேவை தொடங்கி உள்ளது.

இந்திய அரசு நமது அண்டை நாடான இலங்கையின் வளர்ச்சிக்காகப் பல உதவிகளைச் செய்து வருகிறது.    இவ்வகையில் ஏசி வசதியுடன் கூடிய ரயில்கள் மற்றும் இஞ்சின்களை இந்தியா கடன் அடிப்படையில் அளித்துள்ளது.  இந்த ரயில்கள் மூலம் இலங்கையில் பயணியருக்கான சொகுசு ரயில் சேவையை இலங்கை தொடங்கி உள்ளது.

இந்த ரயில் சேவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறை பகுதிக்கும் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள மவுண்ட் வவுனியா பகுதிக்கும் இடையே தொடங்கப்பட்டுள்ளது.   இந்த சேவையை இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் பவித்திர கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த விழாவில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக துணை தூதர் வினோத் ஜேக்கப் பங்கேற்று அமைச்சர் பவித்திர வுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.  அமைச்சர் பவித்திர இலங்கைக்குத் தொடர்ந்து உதவி வரும் இந்தியாவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த ரயில் சேவை மூலம் இந்திய இலங்கை இடையிலான உறவு மேம்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.