சென்னை

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  நாடெங்கும் பல மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   தீவிர கண்காணிப்பும் நடந்து வருகிறது.

ஆயினும் பொதுமக்கள், பிரபலங்கள் என  பலர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  திரையுலகில் பாடகர் சோனு நிகம், நடிகர் ஜான் ஆபிரகாம், மகேஷ் பாபு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கபடுள்ளார்.  அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டுள்ளார்.  தமன் ஈரம் என்னும் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ்,  தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.