சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், நாடு முழுவதும் பொதுவிநியோக திட்டத்தை மத்தியஅரசு நீட்டித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் வரை அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.