டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. டெல்லியில் 351 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அங்கு பள்ளி, கல்லூரிகள் அடைக்க மாநில முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ,  டில்லியில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமிக்ரான் வகை தொற்றால்  பாதிக்கப் பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். இன்று 4,000 பேர் வரை கொரோனா உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொற்று உறுதியாகும் விகிதம் 6.5 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். தற்போது 202 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.