குன்னூர்

டந்த மாதம் 8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு  மோசமான வானிலை காரணம் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் 8 ஆம் தேதி அன்று குன்னூர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மல்லிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இவ்விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்ப குறைபாடும் இல்லை என ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையிலான குழு விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய uள்ளதாகத் தகவலில் கூறப்பட்டுள்ளது.