கொல்கத்தா
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்குக் கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையொட்டி கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலிக்கு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கங்கலியின் உடல்நிலை சீரானதால் நேற்று வீடு திரும்பினார்.
அவரை வீட்டில் இன்னும் சில நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறுவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அவரது சமீபத்திய பரிசோதனையில் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி அவரை மேலும் 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமையிலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
சவுரவ் கங்குலி 2 தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.