டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா, 406 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 1431 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் மேலும், 22,775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,61,579 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில், மேலும், 406 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில், 8,949 பேர் தொற்றின் பிடியில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,75,312 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.32% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1,04,781 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,45,16,24,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 58,11,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 67,89,89,110* சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 11,10,855 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.