சென்னை: சேலம் அருகே உள்ள ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடும் சுற்றுலாத்தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
அதன்படி, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 மதியம் முதல் ஜனவரி 2ம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.‘
அதுபோல சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாத்தலத்துக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நாளை இரவு 11மணிக்கு மேல் வெளியே சுற்றக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Patrikai.com official YouTube Channel