சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – டிஸ்சார்ஜ் உள்பட விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் மாநிலம் முழுவதும கொரோனா பாதிப்பு இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,45,261 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 561709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லி, தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஒமிக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.
ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர்குணமடைந்துள்ள நிலையில், தற்போது சிகிசையில் 19 பேர் உள்ளனர். இன்று கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தலா ஒருவருக்க ஒமிக்ரான பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 31 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
செங்கல்பட்டில் இதுவரை 3 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரையில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவரும், திருவாண்ணாமலையில் 2 பேரும், திருவாரூரில் ஒருவரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 191 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டுள்ள நிலையில், 118 பேருக்கு கொரோனா எஸ் – ஜீன் பாதிப்பும் கண்டறியப்பட்டு உள்ளது.