சென்னை: ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பள்ளிக்க்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பாலியல் புகார்களை தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் தொல்லை புகார்கள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் உறுதித்தன்மை குறித்து, டுதலாக தேவைப்படும் வகுப்பறைகள்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு, தேர்வு ரத்தான நிலையில்,திருப்புதல் தேர்வு, பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் மற்றும் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பள்ளிக்க்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பாலியல் புகார்களை தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.