சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இன்று முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
சமீப காலமாக ஆசிரியர்கள் பள்ளி மாணவிளுக்கு கொடுக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல பள்ளி மாணவிகளும் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். இது ஆசிரியர்கள் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல பள்ளிக்கட்டிங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், அவைகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 அப்பாவி மாணவர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, மோசமான கட்டிடங்களை இடித்து தள்ளும்படி, முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், சென்னையில், இன்று பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவ மாணவிகளுக்கு பாலியல் மீதான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும், இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்களின் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.