அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தவிர அனைத்து இ-காமர்ஸ் இணையதளத்திலும் ஆன்லைன் பேமென்ட் செய்யும் போது உங்கள் கார்ட் விவரங்களை சேமித்து வைக்கலாமா ? என்றொரு கேள்வி வரும், பெரும்பாலானோர் சில இணையதளங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் மீண்டும் தங்கள் கார்ட் விவரங்களை உள்ளிடுவதைத் தவிர்க்க அதனை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

அப்படி சேமிக்கப்பட்ட தரவுகள் அந்தந்த நிறுவனங்களின் தரவு தளத்தில் சேமிக்கப்படுகிறது, இதனால் ஹேக்கர்கள் இந்த தரவுகளை எளிதில் திருட முடிவதுடன், வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து இ-காமர்ஸ் தளங்களுக்கும் ‘டோக்கன்’ வழங்கும் புதிய முறையை ஆர்.பி.ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது.
டோக்கனைசேஷன் எனும் இந்த புதிய முறையில் வாடிக்கையாளரின் கார்ட் விவரங்கள் அந்த குறிப்பிட்ட வங்கிகளிடம் மட்டுமே இருக்கும். இ-காமர்ஸ் தளங்களில் பரிவர்த்தனை செய்யும் போது வாடிக்கையாளரின் கார்ட் விவரங்களுக்குப் பதிலாக வேறு ஒரு குறிப்பெண் (டோக்கன் நம்பர்) அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?
👉 வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. pic.twitter.com/wtxj04WUaX
— The Subject Line (TSL) 🎯 (@the_subjectline) December 23, 2021
வாடிக்கையாளர் வெவ்வேறு இணையதளங்களில் பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் வேறு வேறு குறிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த குறிப்பெண்களை சேமித்துவைக்கவோ அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாக குறிப்பெண்களை உருவாக்கவோ முடியும். இதன் மூலம் வாடிக்கையாளரின் கார்ட் உள்ளிட்ட வங்கித் தரவுகள் அந்தந்த வங்கிகளிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டோக்கனைசேஷனுக்குத் தேவையான மென்பொருளை ஆர்.பி.ஐ. மற்றும் அதன் கீழ் உள்ள வங்கிகள் பலவும் நடைமுறைப்படுத்தி உள்ளன.
வங்கிகளைத் தொடர்ந்து பேமென்ட் கேட்வே நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதற்கான மாற்றத்தை மேற்கொண்டு வரும் நிலையில் ஜனவரி 1 ம் தேதி காலக்கெடுவுக்குள் இது சாத்தியம் இல்லை என்பதால் ஜூன் 30 க்குள் டோக்கனைசேஷனுக்கு அனைவரும் தயாராகும்படி ஆர்,பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.