போபால்
மத்திய பிரதேச அரசு ஒமிக்ரான் அச்சுறுத்தலால் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இவ்வாறு ஒமிக்ரான் பரவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்., நாடெங்கும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் என அறிவித்துள்ளார். நேற்று இரவு முதல் அங்கு இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.
இதுவரை மத்தியப் பிரதேசத்தில் யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை என்றாலும், அண்டை மாநிலமான மகாராஷ்டிரா அதிக அளவில் ஒமைக்ரான் நோயாளிகளைக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசத்துக்கு மகாராஷ்டிராவிலிருந்து வருவோர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
எனவே அவர்கள் மூலம் தொற்று பரவல் அபாயம் உள்ளதாகக்கூறி, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார். ஒமிக்ரான் தொற்று இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் பகுதியளவு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.