டில்லி

நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது.

file pic

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்ற் தற்போது 80க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது.   இந்த பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் சில் ஒமிக்ரான் அலை தவிர்க்க முடியாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.   மத்திய சுகாதார செயலர் மாநிலங்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில்,

“ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்பதால் வார் ரூம்களை தயாராக வைக்கவும். கொரோனா புள்ளி விவரங்களை மாவட்ட அளவில் தொலைநோக்குப் பார்வையோடு சேமிக்கவும்.  இந்த விவரங்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும்.

மேலும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தல், தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தடை விதித்தல் ஆகியனவற்றை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டும். தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் தேவைப்பட்டால் அமல்படுத்தலாம் அத்துடன் பெருங்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.

அவசர நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும்.  தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் ஆகியவை உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பாதித்தோர் உள்ள பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாகப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமிக்ரான் தொற்று பரவல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்.”

எனக் கூறப்பட்டுள்ளது.