சென்னை

மிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,40,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,01,237 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,63,16,308 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருந்து 5 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,40,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,686 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 697 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,96,553 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,60,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,640 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 131 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,50,484 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 97 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,425 பேர் பாதிக்கப்பட்டு 2,495 பேர் உயிர் இழந்து 2,48,818 பேர் குணம் அடைந்து தற்போது 1,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,831 பேர் பாதிக்கப்பட்டு 2,545 பேர் உயிர் இழந்து 1,71,759 பேர் குணம் அடைந்து தற்போது 527 பேர் சிகிச்சையில் உள்ளனர்.