டில்லி

முனை ஆறு கழிவு நீர் கலப்பால் மாசடைவதைத் தடுக்க மத்திய அரசு 2 புதிய அணைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் ஜீவநதிகளில் யமுனை நதியும் ஒன்றாகும்.  இதன் மொத்த தூரத்தில் 2% டில்லியில் ஓடுகிறது.  டில்லியில் ஓடும் யமுனை ஆற்றில் கழுவு நீர் கலப்பதால் மாசடைகிறது.   யமுனை ஆற்றில் ஏற்படும் மாசுகளில் 98% வரை டில்லியில் உள்ள 2% பகுதிகளால் தான் ஏற்படுகின்றன.  இதைத் தடுக்க மத்திய அரசு பல திட்டங்கள் அமைத்து வருகின்றது.

இவற்றில் ஒன்றாக மத்திய அரசு 2 புதிய அணைகள் கட்ட முடிவு செய்துள்ளது.  மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் இது குறித்து செய்தியாளர்களிடம், ”யமுனை ஆறு கழிவு நீரால் மாசடைவதை தடுக்க 2 புதிய அணைகள் கட்டப்பட உள்ளது.   இதற்காகப் பிரதமரின் கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள ரேணுகாஜி, உத்தரகாண்டின் லக்வார் பகுதிகளில் இந்த அணைகள் அமைக்கப்படும்

புதியதாகக் கட்டப்படும் இந்த அணைகள் தலைநகர் டில்லியின் தண்ணீர் தேவைக்கு  மிக முக்கிய பங்கு அளிக்கும்.  யமுனை ஆறு தற்போது பல்வேறு மாசுகளால் பாழடைந்து உள்ளது.  பருவமழை இல்லாத போது குறிப்பிட்ட அளவு தண்ணீர் கங்கை ஆற்றிலிருந்து வெளியேற்றப்படுவது போல் அனைத்து அணைகளிலும் வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டதால் யமுனை ஆறு புத்துயிர் பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]